பாஜக காலையில் உற்சாகம்!மாலையில் JD(S) உற்சாகம்..!கர்நாடக தேர்தலில் திடீர் திருப்பம்

Default Image

கட்சி அலுவலகங்களில்  கர்நாடக தேர்தலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தையடுத்து காட்சிகள் மாறியுள்ளன.

நேற்று  காலை முதலே பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சி அலுவலகத்தின் வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மேள தாளங்களை முழங்கியும், எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே நேற்று  மாலையில் காட்சி மாறியதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா வீட்டுக்குச் சென்றார். ம.ஜ.த. தொண்டர்கள் தேவகவுடாவின் வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

கர்நாடகாவில் 222 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளும், சுயேட்சையும் 3 இடங்களை வென்றுள்ளன.யார் ஆட்சிக்கு வருவார் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்