#Breaking:கவனமாக இருங்க…ஒரே நாளில் 16,159 ஆக உயர்ந்த கொரோனா;1.15 லட்சமாக அதிகரித்த சிகிச்சை!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,086 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,15,212 ஆக உயர்ந்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,270 பேர் ஆக உள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 15,394 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,29,07,327 ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,98,20,86,763 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,95,810 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#COVID19 | India reports 16,159 fresh cases, 15,394 recoveries and 28 deaths in the last 24 hours.
Active cases 1,15,212
Daily positivity rate 3.56% pic.twitter.com/aHVlH7sGaE— ANI (@ANI) July 6, 2022