அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்..!
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இந்திரா பானர்ஜி அமர்வு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் மற்றும் ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.