2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி – உயர்நீதிமன்றம்
2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி.
கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார், சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் அணுகு முறையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை உள்ள துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்ப குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் 242 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ள பேருந்துகளாக கொள்முதல் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அமர்வு மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை பின்பற்றியே பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சட்ட விதிகளையும் உச்சநீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிடபட்டுள்ளது.