பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது!காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியும் வாய்ப்பு கேட்பதால் குழப்பம்!
பாரதிய ஜனதாக் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆதரவு இருப்பதால் தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் 222 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளும், சுயேட்சையும் 3 இடங்களை வென்றுள்ளன.
இதையடுத்து,நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.