12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!

Default Image

12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 15-6-2022 அன்று 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பின் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தொடங்கிய நிலையில், 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், இலங்கை சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்படையினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்