அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.