#Breaking:பகீர்…மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு;ஒரே நாளில் 24 பேர் பலி!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,135 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,103 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,135 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,11,711-லிருந்து 1,13,864 ஆக உயர்ந்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,223 பேர் ஆக உள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 13,958 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,79,477 ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,97,98,21,197 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,78,383 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.