#Justnow:13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்;ஜூலை 6 ஆம் தேதி மாலைக்குள் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று (ஜூலை 4) முதல் ஜூலை 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு,TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்கள்,உள்ளூர் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும்,விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரிடையாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,இந்த விண்ணப்பங்களை தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,சரிபார்க்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் ஜூலை 6 ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்