குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வருகை..! ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி அறைகளில் காத்திருப்பு..!
முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருக்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருக்கின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக எம்.எல்.ஏக்கள், தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.