ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது..! – சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்
அதிமுகவில், ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது என போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அங்கங்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாநகர் முழுவதும் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் அதிமுக தொண்டர்கள் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், அதிமுக தொண்டர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டியுள்ளார். அதில், அதிமுகவில், ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது. தொண்டர்கள் சொல் கேளாமல் தன்னிச்சையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என எழுதப்பட்டுள்ளது.