முதன் முதலாக தமிழ்நாட்டில்… அதுவும் மதுரையில்..! – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை ஏற்று நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதன் முதலாக தமிழ்நாட்டில்… அதுவும் மதுரையில்.. மாநிலங்களுக்கான GSTஇழப்பீடு தொடரவும், ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சரக்கு,சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் சுமைகளை ரத்து செய்யவுமான நல்ல முடிவுகள் நான்மாடக் கூடலில் வெளிவரட்டும்’ என பதிவிட்டுள்ளார்.