முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்…!
புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், அவரது எதிராக முழக்கமிட்டும் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.