ஒரே நேரத்தில் கூகுள் ,ஃபேஸ்புக், அமேசான் என மூன்று ஜாக்பாட் வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்.!
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் இருந்து 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார்.
கணினி அறிவியலில் நான்காம் ஆண்டு படிக்கும் பிசாக் மொண்டல், ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு அதிக ஊதியத்துடன் வேலையை பெரும் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிசாக் மொண்டல் பிர்பூமின் ராம்பூர்ஹாட்டின் ஒரு சாதாரண பின்னணி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை விவசாயி, தாய் அங்கன்வாடி பணியாளர்.
இதுகுறித்து அவர் இந்தியா டுடேவிடம் அளித்த பேட்டியில் “செப்டம்பரில் நான் பேஸ்புக்கில் இணைவேன். இந்த வேலையை ஏற்கும் முன், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களில் இருந்து எனக்கு வேலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன.
ஆனால், . ஃபேஸ்புக் வழங்கும் பேக்கேஜ் அதிகமாக இருப்பதால், ஃபேஸ்புக்கைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நினைத்தேன்” . “இதனால் , எனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.