அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பம் – இந்திய விமானப்படை
அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தகவல்.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் எரிப்பு, பொதுச்சொத்துக்கள் சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்துள்ளன.
ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும், நிலையில் மறுபக்கம் அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி, அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.