உடல்நலக்குறைவால் நடிகர் பூ ராமு மருத்துவமனையில் அனுமதி!

Default Image

தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் பூ ராம் நலம் பெற வேண்டும் என சினிமா பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்