#Justnow:முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக,ஆன்லைன் தடை சட்டம்,புதிய சட்ட மசோதா,புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது,செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
இதனிடையே,அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.