44thChessOlympiad:செஸ் ஒலிம்பியாட் போட்டி – சீனா திடீர் விலகல்!

Default Image

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது.ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக,2014,2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது.குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தனர்.இந்த நிலையில்,44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது.அதே சமயம்,உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷ்யா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு தங்க பதக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே,செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி,கடந்த ஜூன் 19 மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சுற்றி வரும் நிலையில், ஜூலை 28 ஆம் தேதி தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையில் ஜோதி ஒப்படைக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கவுள்ளது.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில்,இவ்விழாவை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்