இனிமேல் இதை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த போதை அழிவின் பாதை என்று அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், மேலும், போதைப்பொருள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.