கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக ஆய்வு முடிவு..!
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவு அறிக்கையை ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் ஏற்பட்ட பலன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
185 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பலன்கள் குறித்து அதில் சொல்லப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிர் பறிபோகும் அபாயம் இருந்த 3.14 கோடி பேரில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் 1.98 கோடி பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 42 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.