#BREAKING: சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! – டிஜிபியிடம் புகார்!
சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார்.
அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.