தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் பல நோய்கள் உடலில் ஏற்படாது?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தினமும் வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்
வேர்க்கடலையில் விட்டமின் ஏ, விட்டமின் பி3 போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வேர்க்கடலைக்கு உடலில் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை நம்மால் தவிர்க்க முடியும். வேர்க்கடலையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது கேன்சர் செல்களை கூட வளர விடாமல் தடுக்கக்கூடியது.
அதுமட்டுமில்லாமல் வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் இதயத்தையும் பாதுகாக்கும். பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்க கூடிய எளிமையான இந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வருவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக காலை 11 மணியளவில் அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக வேர்கடலை சாப்பிட கொடுக்கலாம்.
50 கிராம் வேர்க்கடலை தினமும் உடலுக்கு எடுத்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கும். வேர்க்கடலையை வறுத்து சாப்பிடலாம் அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால் வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற ஒரு பொருள் இருக்கிறது. இது செரிமானத்தை பாதிக்கக்கூடியது. அதனால் கசப்பான வேர்க்கடலை இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.
கூடிய அளவு புதிதான வேர்க்கடலையையே கடையில் வாங்கி சாப்பிட்டு வாருங்கள். வேர்க்கடலையை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற அபாயம் நமக்கு தேவையில்லை. ஏனென்றால் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் இது மலச்சிக்கலை ஏற்படுத்தாமல் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகளை வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலமாக வெளியேற்ற உதவியாக இருக்கும். வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடலாம்.
ஆனால் எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலுக்குத் தீமை ஏற்படலாம். குறிப்பாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையைச் சாப்பிட்டு வாருங்கள். ஒரு மணி நேரம் பிறகு சாப்பிடும் போது உங்களால் அதிக அளவு உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் உணவின் அளவு குறைந்துவிடும். இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)