#Breaking:இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Default Image

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்(2022-23 ஆம் ஆண்டுக்கான) கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக,மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்,தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இந்நிலையில்,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்