ராட்சச அட்வென்ச்சர் வாகனத்தில் கெத்தாக தளபதி விஜய்.! வெளியான அடுத்த போஸ்டர் இதோ….

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார்.

இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் காலை படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியிடபட்டது.

இதனையடுத்து, தற்போது படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரும் வெளியீடப்பட்டுள்ளது. போஸ்டரில் அட்வென்ச்சர் பைக்கில் கெத்தாக அமர்ந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. படத்திலிருந்து வெளியான மூன்று போஸ்டர்களும் அருமையாக இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment