நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு – துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல்!
நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு எடுத்துள்ளதாக அவருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது. இதனிடையே,அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.எனினும்,ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு எடுத்துள்ளதாக அவருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் அளித்துள்ளார்.