வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்…இதற்கான வட்டி விகிதம் உயர்வு!

Default Image

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,

  • பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
  • HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% முதல் 5.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.25% முதல் 6.50% வரையிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
  • கோடக் மஹிந்திரா வங்கி: பொதுக் குடிமக்களுக்கு 2.50% முதல் 5.90% வரையிலும்,மூத்த குடிமக்களுக்கு 3% முதல் 6.56% வரையிலும் வட்டி விகிதங்கள் உய்ரதப்பட்டுள்ளன.
  • பஞ்சாப் நேஷனல் வங்கி: சாதாரண குடிமக்களுக்கு 3% முதல் 5.5% வரையிலும்,மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 6% வரையிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
  • கனரா வங்கி:பொது குடிமக்களுக்கு வட்டி விகிதம் 2.90% முதல் 5.75% வரையிலும்,மூத்த குடிமக்களுக்கு 2.90% முதல் 6.25% வரையிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi