அக்னிபத் பிரச்சாரத்தில் அரசு வங்கிகள் – சு.வெங்கடேசன் எம்.பி
அரசு வங்கி என்ற அந்தஸ்தே தற்காலிகம் எனச் சொல்வது குறித்து கவலைப்படாமல் அக்னிபத்திற்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள்? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அக்னிபத் பிரச்சாரத்தில் அரசு வங்கிகள் இறங்கியுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘அக்னிபத் பிரச்சாரத்தில் அரசு வங்கிகள் இரண்டு அரசு வங்கிகள் தனியார்மயமாகும் என்ற அறிவிப்பு தலைக்கு மேல் கத்தியாக… அரசு வங்கி என்ற அந்தஸ்தே தற்காலிகம் எனச் சொல்வது குறித்து கவலைப்படாமல் அக்னிபத்திற்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள் ?’ என பதிவிட்டுள்ளார்.
அக்னிபத் பிரச்சாரத்தில் அரசு வங்கிகள்
இரண்டு அரசு வங்கிகள் தனியார்மயமாகும் என்ற அறிவிப்பு தலைக்கு மேல் கத்தியாக…
அரசு வங்கி என்ற அந்தஸ்தே தற்காலிகம் எனச் சொல்வது குறித்து கவலைப்படாமல் அக்னிபத்திற்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள் ? #AgnipathScheme #Agniveer pic.twitter.com/5Qc6oQziqr
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2022