#BREAKING: அடுத்த அறிவிப்பு.. அக்னிபத் திட்டம் – ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்!
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவிப்பு.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் எரிப்பு, பொதுச்சொத்துக்கள் சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்துள்ளன.
ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும், நிலையில் மறுபக்கம் அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதாவது, இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை நேற்று வெளியிட்டது மத்திய அரசு. அதன்படி, அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேருவதற்கு வரும் ஜூன் 24-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, careerindianairforce.cdac.in என்ற இந்திய விமானப்படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24 முதல் தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படையில் பெறுபவர்களுக்கு அக்னி வீர் வாயு என பெயரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Join the Indian Air Force as an #Agniveer.
Registration for #AgnipathRecruitmentScheme starts from 24 June 2022 and ends on 05 July 2022.
Online examination starts from 24 July 2022.For details, visit https://t.co/w1hj11fZ2K pic.twitter.com/IHYz81kgxh
— Indian Air Force (@IAF_MCC) June 21, 2022