மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்! – அண்ணாமலை ட்வீட்

Default Image

‘பரிட்சை’ எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள, மாணவ, மாணவியர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்துகொண்டு வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், ‘பரிட்சை’ – எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. சரித்திரத்தில் இருந்ததுமில்லை. குறைவான மதிப்பெண் (தங்களுடைய கணக்கின்படி), தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள் – ‘உங்கள் வாழ்க்கை உங்களுக்காக ஒரு பெரிய கதவைத் திறப்பதற்கு தயாராக இருக்கிறது’. எனவே, துணிவோடு, தைரியமாக பயணியுங்கள்! என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்