சிதம்பரம் கோயில் சர்ச்சை:நாளை மாலை 3 மணிக்குள் – இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள்,ஆலோசனைகளை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி, அறநிலையத்துறை அமைத்துள்ள குழுவிடம் இன்றும்,நாளையும் (ஜூன் 20,21 ஆகிய தேதிகளில்) காலை 10 மணி முதல் 3 மணி வரை சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கருத்துக்களை கூறலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,நேரிலோ அல்லது vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ நாளை ஜூன் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.இதனிடையே,சிவபக்தர்கள் கோயிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு வருகை புரிவர் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறபபடுகிறது.