ஒற்றை தலைமை விவகாரம் : நான் இரண்டு பேருக்குமே ஆதரவு : வெல்லமண்டி நடராஜன்
ஒற்றை தலைமை தேவையில்லை. இரட்டை தலைமையே இருக்கட்டும் என வெல்லமண்டி நடராஜன் பேட்டி.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அதிமுகவில் உள்ள முக்கிய பிரபலங்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், சிலர் இரட்டை தலைமையே இருக்கட்டும் என்றும் வலியுறுத்தி வருகின்ற்னர். இந்த நிலையில், ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி வெல்லமண்டி நடராஜன், ஒற்றை தலைமை தேவையில்லை. இரட்டை தலைமையே இருக்கட்டும். நான் இரண்டு பேருக்குமே ஆதரவு தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.