அசத்தல் அப்டேட்…புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்!

Default Image

உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்(மெட்டா) நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிடுகிறது.இந்நிலையில்,உங்கள் சுயவிவரப் படம்(profile picture) உள்ளிட்ட  தகவல்களை மறைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp

அதன்படி,வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது ப்ரைவசி அம்சம் மூலம் status,about ஆகியவற்றை மட்டுமே யார் பார்க்கலாம் என்று நிர்ணயித்து வந்த நிலையில்,தற்போது profile picture யார் யாருக்கு தெரியும்படி வைக்கலாம், last seen-ஐ யார் பார்க்கலாம் என்ற புதிய அம்சத்தையும்  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும்,புதிதாக தொடங்கப்படும் வாட்ஸ் அப் குரூப்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் என்ற ப்ரைவசி கட்டுப்பாட்டு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும்,இதுவரை வாட்ஸ்அப்பில் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு குறைந்த அளவிலான கோப்புகளை (Files) மட்டுமே அனுப்ப முடியும்.குறிப்பாக,100 MB க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாத நிலை இருந்து வந்த நிலையில்,2ஜிபி வரையிலான போட்டோ,வீடியோ போன்றவற்றை பகிரும் வசதியும் வாட்ஸ்அப் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.

WhatsApp

இதனைத் தொடர்ந்து,வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.அதன்படி,வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்