#Justnow:100-வது பிறந்த நாள் – தனது தாயாரின் பாதங்களை கழுவிய பிரதமர் மோடி!

Default Image

குஜராத்:பிரதமர் மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை காந்திநகரில் தற்போது கொண்டாடினார்.ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி,இன்று தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்திநகரில் உள்ள அவரது இல்லம் சென்றடைந்தார்.

அதன்பின்னர்,பிரதமர் மோடி தனது தாயாரின் பாதங்களைக் கழுவி ஆசி பெற்றார்.இதனைத் தொடர்ந்து,தனது தாயை சந்தித்த சில நிமிடங்களில் பிரதமர் மோடி அவரது இல்லத்தை விட்டு வெளியேறினார்.

சில ஊடக அறிக்கையின்படி,100 வயதாகியும் மோடியின் தாயார் அதிகம் நோய்வாய் பட்டதாக செய்தி இல்லை.சாமானியர்களின் ஆரோக்கியத்தை விட அவரின் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் எளிமையான உணவை விரும்புகிறார்.அதுவே அவருடைய ஆரோக்கியத்தின் ரகசியமாக இருக்கலாம்.பிரதமர் மோடியின் தாயார் எந்த ஒரு சிறப்பு உணவையும் சாப்பிடாமல்,தானாக சமைக்கும் உணவையே சாப்பிட விரும்புகிறார்.அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்ட உணவை அவர் விரும்புவதில்லை.மேலும்,அவர் தினசரி உணவில் பருப்பு,சாதம்,கிச்சடி,சப்பாத்தி சாப்பிட விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,பிரதமர் மோடி,குஜராத்தின் வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும்,ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து,பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பிரதமர் மோடி இன்று பயனாளிகளுக்கு வழங்குகிறார்.மேலும்,பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்