மாலை 6 மணிக்கு மேல் இங்கு செல்ல தடை – புலிகள் காப்பக இயக்குனர்
வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவு.
மலைபிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வப்போது, வால்பாறையில் சுற்றுலாவை முன்வைத்து சில சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல ஆனைமலை புலிகள் காப்பகம் தடை விதித்துள்ளது. சுற்றுலாவை முன்வைத்து நடைபெறும் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புலிகள் காப்பக இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.