உடல் எடை அதிகமாக இருக்கா? இந்த ஒரு டம்ளர் சூப் போதும்..!

Kollu soup

30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த ஒரு டம்ளர் சூப் குடித்து பாருங்கள்.

உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க அருமையான சூப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு மிகவும் முக்கியமான பொருள் கொள்ளு. கொள்ளு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கொள்ளு போடி தயார் செய்யும் முறை 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 200 கிராம் கொள்ளு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். கொள்ளை வதக்கும் போது அது வறுபட்டு பொரிந்து வரும். அப்படி பொரிந்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளலாம். வறுக்கப்பட்ட கொள்ளை ஒரு பெரிய அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு அதை ஆற வைக்க வேண்டும்.பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடி இரண்டு மாதம் வரை கெட்டுப் போகாது.

கொள்ளு சூப் செய்யும் முறை 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300ml அளவு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரில் ஒன்றரை டீஸ்பூன் அளவு நாம் பொடி செய்து வைத்துள்ள கொள்ளு பொடியை சேர்க்கவேண்டும். இதனுடன் நறுக்கிய பூண்டுப் பல் 1, சீரகம் கால் ஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஏழு நிமிடம் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு பின்னர் வடிகட்டி இதனுடன் கால் ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கொள்ளு சூப் ரெடி. இதனை காலை டீ, காபிக்கு பதிலாக வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை தினந்தோறும் 30 நாட்கள் வரை தொடர்ந்து குடித்து வர உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீங்கி உடல் எடையை படிப்படியாக குறைய வைக்கும்.

முயற்சி செய்து பாருங்கள், நல்ல பலனை அடைவீர்கள். மேலும் கொள்ளு உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது என்பதால் உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் மூன்று நாள் என்ற முறையில் இந்த கொள்ளு சூப் குடிப்பது நன்மை தரும். மேலும் உடலில் வேறு ஏதாவது பிரச்சனை இருப்பவர்கள், தினந்தோறும் மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த சூப்பை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்