பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு – சு.வெங்கடேசன் எம்.பி
பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த தேர்வு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு. 2014 இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை “ஜும்லா” என்று உங்கள் அமைச்சர் கூறினார். மீண்டும் இன்னொரு ஜும்லாவாக மாறிவிடக்கூடாது. மாநில அளவிலும், மாநில மொழி அறிவு அடிப்படையிலும் அறிவிப்பினை நிறைவேற்றுக.’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு.
2014 இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை “ஜும்லா” என்று உங்கள் அமைச்சர் கூறினார்.
மீண்டும் இன்னொரு ஜும்லாவாக மாறிவிடக்கூடாது.
மாநில அளவிலும், மாநில மொழி அறிவு அடிப்படையிலும் அறிவிப்பினை நிறைவேற்றுக. #10lakhjobs pic.twitter.com/Z6JZR7d4dc
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 15, 2022