#BREAKING: இந்த வகுப்புகளுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்ந்து முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டால், திரும்ப தரப்படாது என்று திட்டவட்டமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.