#BREAKING: மத்திய அரசு பணியில் 10 லட்சம் பேர் – பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!

Default Image

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் சேர்க்க தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவு.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர் தங்கள் தொழிலை தொடங்க முடியாமல் அவதியில் உள்ளனர். மேலும், தங்களது வேலைகளை இழந்துவிட்டு புதிய வேலை தேடி வரும் சூழல் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழலில் பிரதமர் மோடி, மத்திய அரசு பணியில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதை mission mode என்று சொல்லப்படும் விரைந்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்