அதிர்ச்சி சம்பவம்; புதுமண தம்பதி வெட்டிக்கொலை.. கொன்றவர்களை தேடும் போலீஸ்!

Default Image

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் திருமணமான புதுமண தம்பதி ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு. 

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதிதாக திருமணம் செய்துகொண்ட சரண்யா – கணவர் சேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். புதிதாக திருமணம் செய்துகொண்டு ஊருக்கு திரும்பிய நிலையில், தம்பதி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்த சரண்யாவின் சகோதரன் சக்திவேல் மற்றும் ரஞ்சித் என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

புதிய தம்பதியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தலைமைறைவாக உள்ள சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் என்பவரை காவல்துறை தேடி வருகிறது. சோழபுரம் பகுதியை சேர்ந்த சரண்யா, சென்னையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சரண்யாவிற்கு, அவரது உறவினர் மகனுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் சரண்யா, காதலன் மோகனுடன் சென்னையில் திருமணம் செய்துகொண்டு, இன்று சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு திரும்பியதாக தெரியவருகிறது.

சரண்யாவின் சகோதரர், அடகு வைத்த நகைகளை மீட்க உடனடியாக வரவேண்டும் என்றும் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிடு எனவும் அழைப்பு விடுத்ததாகவும், இதன் அடிப்படையில் சரண்யா ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வங்கியில் கையெழுத்து போட்டுவிட்டு, மீண்டும் சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், தம்பதியினர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது, சரண்யா சகோதரர் மற்றும் அவரது நண்பர் புதுமண தம்பதியை கம்பியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

திருமணமான புதுமண தம்பதி ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமான இருவரை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்