#BREAKING: பரபரப்பு… ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி கைது!
அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக ராகுல் காந்தி பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தபோது தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்டை டெல்லி பதேப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றது போலீஸ். மேலும், மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் ஆளும் பாஜக அரசு இருப்பதாகவும், இது அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை எனவும் கூறி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ईडी के दफ्तर जाते हुए दिल्ली पुलिस ने गिरफ्तार किया है। मल्लिकार्जुन खड़गे जी, जयराम रमेश जी, मुकुल वासनिक जी, दिग्विजय सिंह जी, दीपेंद्र हुड्डा जी, पवन खेड़ा जी, पीएल पूनिया जी, गौरव गोगोई जी, मीनाक्षी नटराजन जी सहित कांग्रेस नेताओं को सेन्ट्रल दिल्ली से दूर बस में बैठा कर
1/2 pic.twitter.com/XFTuTZcBQH— Ashok Gehlot (@ashokgehlot51) June 13, 2022