#BREAKING: முதல் நாளே அதிர்ச்சி.. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.
வாரத்தின் முதல் வணிக நாளில் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்படுகிறது. அந்தவகையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 பபுள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் சரிந்து, 52,881 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 413 புள்ளிகள் குறைந்து, 15,788 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளும் வீழ்ச்சியில் காணப்படுகிறது.
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.78-ஐ தாண்டியுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து, புதிய உச்சமான ரூ.78.29-ஐ தொட்டுள்ளது.