#Justnow:தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமருடன் சந்திப்பு!
தமிழக அரசுக்கும்,ஆளுநர் ஆர்என் ரவி அவர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கூட ஆளுநர் ஆர்என் ரவியின் சனாதன பேச்சு குறித்து சில காட்டமான கட்டுரை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.இதனைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடி அவர்களை ஆளுநர் சந்திக்க உள்ளார். இதனையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்என் ரவி சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதே சமயம்,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது.அதன்படி,மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைக் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.மேலும்,தேசிய ஜனநாயகக் கூட்டணி,ஐக்கிய முற்போக்கு கூட்டணி,தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில்,ஆளுநர் ஆர்என் ரவி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.