ஆபாசமாக நடந்த புகாரில் கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து நீக்கம்…!
ஆபாசமாக நடந்த புகாரில் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில்அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.
அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார்.
ஆபாசமாக நடந்த புகாரில் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில்அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.