#Breaking:குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை !

Default Image

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் குடியரசுத்தலைவர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது.இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடு முழுவதும் உள்ள 22 கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது:”குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு நாம் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.அதற்கு தங்களது கட்சி எம்பிக்கள்,எம்எல்ஏக்களின் பங்களிப்பு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில்,குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர்கள் கேஎன் நேரு,பொன்முடி,நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்