#Breaking:உஷாரா இருங்க…ஒரே நாளில் 8,582 பேருக்கு கொரோனா;44,513 பேருக்கு சிகிச்சை!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,329 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் ஆக 8,582 அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,22,017 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆக பதிவாகியுள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,761 ஆக பதிவாகியுள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 4,435 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,52,743 ஆக பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 44,513 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 1,95,07,08,541 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 13,04,427 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.