#IPLMediaRightsAuction:எகிறும் எதிர்பார்ப்பு…இன்று நடைபெறும் IPL ஒளிபரப்பு உரிமை ஏலம்;ரூ.50 ஆயிரம் கோடியா?..!

Default Image

இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) இன்று (ஜூன் 12 ஆம் தேதி) காலை 11:00 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன.அதிகபட்சமாக 50 ஆயிரம் கோடி வரை ஏலத்தொகை கேட்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை ஒளிபரப்பு செய்வது,B தொகுப்பு என்பது இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வது,C பேக்கேஜ் என்பது எக்ஸ்க்ளூசிவ் போட்டிகளை மட்டும் ஓடிடி ஒளிபரப்பு செய்வது,

கடைசியாக,பேக்கேஜ் D என்பது இந்தியாவைத் தவிர உலகின் பிற பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த (டிவி மற்றும் டிஜிட்டல்) உரிமம் பெறுவதாகும்.

ஒவ்வொரு பேக்கேஜ்ஜின் அடிப்படை விலை:

பேக்கேஜ் A – ஒரு போட்டிக்கு ரூ.49 கோடி
பேக்கேஜ் B – ஒரு போட்டிக்கு ரூ.33 கோடி
பேக்கேஜ் சி – ஒரு போட்டிக்கு ரூ.11 கோடி
பேக்கேஜ் D- ஒரு போட்டிக்கு ரூ.3 கோடி என நான்கு பிரிவுகளையும் சேர்த்து ஐபிஎல் உரிமத்திற்கான அடிப்படை விலை 32,890 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,74 போட்டிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள நிலையில்,அடுத்த ஐந்து ஆண்டுகளில் 410 போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஏலதாரர்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,ரிலையன்ஸ்,டிஸ்னி மற்றும் சோனி குரூப் கார்ப் நிறுவனங்கள் ஒளிபரப்பு  உரிமைகளைப் பெற ஆர்வமாக உள்ளன.ஏனெனில் இந்த ஒப்பந்தத்தை யார் பெறுகிறார்களோ,அவர் இந்தியாவின் முன்னணி மீடியா பிளேயராக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.எனவே ஏலத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்