#Justnow:”ஆஜராக நேரிடும்” – தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Default Image

சென்னை,பிராட்வே பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மறைந்த டிராபிக் ராமசாமி முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,மாற்று இடம் வழங்க மேலும் இரண்டு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால்,ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டதாக கூறி சென்னை மாநகராட்சியின் கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில்,வருகின்ற ஜூன் 23 ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தபோது பணியில் இருந்த முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன்,சென்னை மாநகராட்சி ஆணையர்,காவல் ஆணையர் உள்ளிட்டோரும்,அதே பொறுப்பில் தற்போது இருப்பவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து,வழக்கை ஜூன் 23 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்