#BREAKING: கருமுட்டை விவகாரத்தின் எதிரொலி.. இதற்காக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

Default Image

இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் எதிரொலியால் இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும், குடும்பநலத்துறை இயக்குனர் துணை தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா குழுவில் உள்ளனர். இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட விதிமீறல்களுக்கு, அதாவது கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை அபராதம் மற்றும் மறுமுறை தவறு செய்தால் 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போதைய சட்டத்தால் 23 முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும் என கூறப்படுகிறது. சட்டத்தை அமல்படுத்த மாநிலத்தில் விதிகளை அறிவிக்காத நிலையில், கருமுட்டை விவகாரத்தை அடுத்து சட்டம் விதிகளை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்