சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள்…!

Default Image

ஜார்கண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள்.

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே புதன்கிழமை இரவு சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கிராம மக்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்லா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அவரது மனைவி குழந்தைகளோடு அருகில் உள்ள ஊரில் உறவினரின்இல்ல  நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுனில் மற்றும் ஆஷீஷ் ஆகியோர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பி பெற்றோர் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் தங்கள் மகள் வீட்டுக்கு வரவில்லை என்று தேடத் தொடங்கிய நிலையில் காட்டுப்பகுதி வழியாக வந்த சிறுமி தன்னை அழைத்துச் சென்றவர்கள் தன்னை கூட்டு பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுனில் மற்றும் ஆசிஸ் இருவரையும்  இரு சக்கர வாகனத்துடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சுனில் உயிரிழந்த நிலையில், ஆஷிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்