ராமஜெயம் கொலை வழக்கு; விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு!
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 2-ஆவது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது.
தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து, கடந்த 2012ல் ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மற்றொரு சகோதரர் ரவிசந்திரன் வழக்கின் விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.